அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா


அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
x

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சிவபழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் வரவேற்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் துரைராஜ், சங்க மாநில செயலாளர் கோதண்டபாணி, சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் கலா, மாவட்ட செயலாளர் இளவரசன் ஆகியோர் பேசினர்.

காலமுறை ஊதியம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை செயலாளர் ராமானுஜம், மாவட்ட பொருளாளர் பழனிவேல் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் குழு உறுப்பினர் லதா நன்றி கூறினார்.

---


Next Story