அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x

கடலூர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் கடலூர் சிப்காட்டில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முன்பு அரசு பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் நிர்வாகம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளரும், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவருமான சரவணனை தற்காலிக பணி நீக்கம் செய்ததை கண்டித்தும், நீதிமன்றம் விதித்த தடையை அமல்படுத்துவதற்கு மாறாக நிரந்தர பணிநீக்கம் செய்த டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்தும், பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரராஜா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயல் தலைவர் பழனிபாரதி, பொதுச்செயலாளர் கோதண்டம், மாவட்ட தலைவர் அல்லிமுத்து, மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க கடலூர் மாவட்ட தலைவர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story