அரசு பண்ணையில் மீன்கள் திருடியவர் மீது வழக்கு
தேவதானப்பட்டி அரசு பண்ணையில் மீன்கள் திருடியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
தேவதானப்பட்டி மஞ்சளாறு அரசு மீன் பண்ணையில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இங்கு 300 திலேப்பியா மீன்கள் வளர்க்கப்பட்டன. இந்நிலையில் இன்று மீன் பண்ணை ஆய்வாளர் அண்ணாதுரை பண்ணையில் ஆய்வு செய்தார். அப்போது 157 மீன்கள் திருடு போனது தெரியவந்தது. விசாரணை நடத்தியதில் அதே ஊரை சேர்ந்த பாண்டி (வயது 48) என்பவர் மீன்களை திருடி விற்றது தெரியவந்தது. இதுகுறித்து மீன் பண்ணை ஆய்வாளர் தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story