அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைகுழு கூட்டம்
கோவில்பட்டியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு குழு தலைவர் ரெங்கம்மாள் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயலதா, நகர்மன்ற உறுப்பினர்கள் உலகு ராணி, சித்ராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மேம்பாடு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில் இடைநிற்றல் மாணவி களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும். மாணவிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவிகளின் தேவைக் கேற்ப கூடுதல் வகுப்பறைகள் கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டும் உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
கூட்டத்தில் வட்டார வள பயிற்றுனர் ஜமிலா, இளைஞர் பிரிவு தலைவர் முத்துமுருகன் உள்ளிட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.