குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியில் இல்லாததால் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள் ஏமாற்றம்


குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில்  டாக்டர் பணியில் இல்லாததால்  சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள் ஏமாற்றம்
x

குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியில் இல்லாததால்சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கன்னியாகுமரி

குலசேகரம்:

குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பணியில் இல்லாததால்சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

குலசேகரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் தற்போது முழு நேர மகப்பேறு டாக்டர் இல்லை. தக்கலை அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மகப்பேறு டாக்டர் ஒருவர் இங்கு வந்து சிகிச்சை அளித்து செல்லும் நிலை உள்ளது.

இந்த நிலையில் கர்ப்பிணிகள் 5 பேர் நேற்று சிகிச்சைக்காக வந்திருந்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் மகப்பேறு டாக்டர் இல் லை. இதையடுத்து கர்ப்பிணிகள் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர்.

இதுபற்றி அறிந்த குலசேகரம் பேரூராட்சி தலைவி ஜெயந்தி ஜேம்ஸ், வார்டு கவுன்சிலர்கள் எட்வின் ராஜ், மேரிஸ்டெல்லா, ரபீக்கா பீவி, சுபாஷ் கென்னடி மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ், பொருளாளர் ஜேம்ஸ், மாவட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரி மருத்துவ அலுவலர் டாக்டர் சாஸ்தாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள். அப்போது, மகப்பேறு டாக்டர் வேறு இடத்தில் மாற்றுப் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அதனால் ஆஸ்பத்திரியில் பணியில் இருக்கும் பொதுமருத்துவர் மூலம் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறினார். அதைத் தொடர்ந்து பெண் டாக்டர் வந்து கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மட்டும் செய்தார். இதைத் தொடர்ந்து கர்ப்பிணிகள் முழுமையாக பரிசோதனைகள் கிடைக்காத நிலையில் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இது குறித்து வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ் கூறும்போது, 'குலசேகரம் அரசு ஆஸ்பத்திரியில் நிரந்தர மகப்பேறு டாக்டர் நியமிக்கக்கோரி 20-ந் தேதி ஆஸ்பத்திரி முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என்றார்.


Next Story