அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்


அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம்
x

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். கடந்த 2019-ம் ஆண்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதல்வராக இருந்த போது டெண்டர் விடுவதில் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அதன் பிறகு மேல்நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது அவருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளனர். இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மருத்துவத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. மேலும் அவருக்கு பதிலாக மருத்துவமனை கண்காணிப்பாளர் வீரமணியை, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பணியை கூடுதல் பொறுப்பாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விஜயகுமார் வருகிற 30-ந்தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story