புதுச்சேரியில் அரசு தலைமை பொது மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்..!


புதுச்சேரியில் அரசு தலைமை பொது மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்..!
x
தினத்தந்தி 9 Aug 2023 9:21 AM IST (Updated: 9 Aug 2023 10:13 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் அரசு தலைமை பொது மருத்துவமனை செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் அரசு தலைமை பொது மருத்துவமனையில் செவிலியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7-வது ஊதியக்குழு பரிந்துரை செய்துள்ள தொகையை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

100-க்கு மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story