அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்
அரசு அலுவலக உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் மதுரம் தலைமை தாங்கினார். அகில இந்திய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்கியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல். அரசு பணியாளர்களை தனியார்மயமாக்கும் அரசாணையை ரத்து செய்திட வேண்டும். தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்புகளை வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தினக்கூலி பணியாளர்கள், பூங்கா மற்றும் பண்ணை பணியாளர்கள், நூலகத்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மணிமுத்து உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளராக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். முடிவில் மாநில பொருளாளர் முனியப்பன் நன்றி கூறினார்.