அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்


அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
x

நெல்லையில் அரசு அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்த அரசு அலுவலர்கள் நெல்லை பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள ஜோதிபுரம் திடலில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலர் ஒன்றிய நெல்லை மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் பகவதியப்பன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். மாநில தலைவர் சண்முகராஜன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அரசு அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கையான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத்தொகையினை உடனுக்குடன் தாமதம் இன்றி வழங்க வேண்டும். மாநகராட்சிகளில் பணியிடங்களை குறைத்திட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மாநில செயலாளர் நாஞ்சில் நீதி, மகளிர் அணி செயலாளர் மீனாட்சி, மாவட்ட துணைத்தலைவர்கள் அருணாசலம், சண்முகமூர்த்தி, முத்துராமலிங்கம், ஆறுமுகப்பாண்டி, எலிசபெத் ராணி, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் நக்கீரன், அமைப்பு செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சீதாராமன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசினார். மாவட்ட தலைவர் மெல்வின் விக்டர் நன்றி கூறினார்.


Next Story