அரசு நெல் கொள்முதல் நிலையம்
ெ்பருமாக்கநல்லூரில் திறந்த வெளியில் இயங்கும் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ெ்பருமாக்கநல்லூரில் திறந்த வெளியில் இயங்கும் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டிட வசதி இ்ல்லை
பாபநாசம் தாலுகா பெருமாக்கநல்லூரில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு காவலூர், தோட்டம், பெரப்பலகுடி, பெருமாக்கநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையத்திற்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரக்கூடிய நெல்லை உலர்த்த போதுமான இடவசதியோ, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யக்கூடிய நெல்லை பாதுகாப்பாக அடுக்கி வைக்க கட்டிட வசதி இல்லாததால் திறந்த வெளியில் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க கூடிய நிலையில் அரசு கொள்முதல் நிலையம் பாதுகாப்பு இன்றி செயல்பட்டு வருகிறது.
நிரந்தர கட்டிடம் வேண்டும்
மழைக்காலங்களில் கட்டிட வசதி இல்லாததால் விவசாயிகள் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ள நெல்லும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகளும் நனைந்து வீணாகும் நிலை ஏற்படுகிறது. கொள்முதல் நிலையத்திற்கு உலர் களத்துடன் நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும் இதுநாள் வரை பெருமாக்கநல்லூர் அரசு கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட அரசு முன்வரவில்லை. எனவே விவசாயிகளின் சிரமத்தை போக்க பெருமாக்கநல்லூர் அரசு கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.