அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம்
கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி தனியார் மண்டபத்தில் அரசு ஓய்வூதியர் சங்க 36-ம் ஆண்டு விழா நடைபெற்றது. சங்க தலைவர் அய்யலுசாமி தலைமை தாங்கினார். இணை செயலாளர் முருகன் வரவேற்று பேசினார். செயலாளர் கேசவன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் அய்யனார் வரவு- செலவு அறிக்கை வாசித்தார்.
விழாவில் நெல்லை அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை டாக்டர் அருணாசலம் 'இதயத்தை காப்போம்' என்ற தலைப்பிலும், கோவில்பட்டி ஸ்ரீ செந்தூர் மருத்துவமனை மருத்துவர் செ.சுபாஷினி 'சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவோம்' என்ற தலைப்பிலும் பேசினர்.
அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதிய சங்க அமைப்பு செயலாளர் சண்முக சுந்தர்ராஜ் வாழ்த்தி பேசினார். துணைத்தலைவர் அய்யாசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story