அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் வரவேற்பு


அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 14 Jan 2023 12:30 AM IST (Updated: 14 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் வரவேற்பு

திண்டுக்கல்


சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான தேவராட்டம் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பிரதீப்நாராயணன், சபரீஸ்குமார், ரஞ்சித்குமார், ராகுல், அஜித்குமார், பாஸ்கரன், மாணவிகள் ரமணிதேவி, மதுபாலா, ஜெயபிரியா ஆகியோர் பங்கேற்று மாநில அளவில் 3-ம் இடமும், திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடமும் பிடித்தனர். இந்த நிலையில் நேற்று அந்த மாணவர்கள் தங்களின் சொந்த ஊரான காளாஞ்சிப்பட்டிக்கு வந்தனர். அப்போது கிராம மக்கள் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் தாரை, தப்பட்டை முழங்க அவர்களுக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.



Next Story