அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

அரசு பள்ளி ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

திருச்சி குண்டூர் அய்யனார் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் மோகன ராஜன்(வயது 46). இவர் மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மோகன ராஜன் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இருந்த போதிலும் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மோகன ராஜன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story