அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
ஊதிய உயர்வு வழங்க கோரி பந்தலூரில் உள்ள அரசு தேயிலை ேதாட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்,
ஊதிய உயர்வு வழங்க கோரி பந்தலூரில் உள்ள அரசு தேயிலை ேதாட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய உயர்வு
பந்தலூர் அருகே நெல்லியாளம், சேரம்பாடி, கொளப்பள்ளி, சேரங்கோடு, சின்கோனா, பாண்டியார் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசின் தேயிலை தோட்ட கழக (டேன்டீ) தோட்டங்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.425.40 சம்பளம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை தினக்கூலி உயர்வு வழங்கப்பட வில்லை.
இந்தநிலையில் நேற்று நெல்லியாளம் ரேஞ்ச் எண் 4-ல் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பெரியசாமி, டேவிட் குமார், ரவீந்திரன் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதேபோல் நெல்லியாளம் அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண்.3-ல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாண்டியன், ெஜயபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர் போராட்டம்
தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:- இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்ட தேயிலை தோட்டங்களின் நிலங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும். ஒப்படைத்த நிலங்களில் மீண்டும் பச்சை தேயிலை பறிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அரசு அறிவித்த ரூ.425.40 சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பூதியம், மருத்துவ ஊதியம் வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள பண பலன்களை வழங்க வேண்டும். பணியில் இருந்து நிறுத்தப்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் அனைவருக்கும் பணி வழங்க வேண்டும். கள மேற்பார்வையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொழிலாளர்களின் குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். அங்கு சாலை, நடைபாதை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.