அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கூட்டம்
ஆற்காட்டில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தலைமை ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு சார்பில் அகவிலைப்படி உயர்வு மீட்பு குழு போராட்ட ஆயத்த விளக்க கூட்டம் ஆற்காட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். வேலூர் மண்டல தலைமை ஒருங்கிணைப்பாளர் முத்துமாணிக்கம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக தசரதன், சுப்பிரமணி, கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை அரசு கருவூலம் வழியாக அரசே வழங்கிட வேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இணை ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story