அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் (சி.ஐ.டி.யு) மற்றும் ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க நிர்வாகி சரவணன் தலைமை தாங்கினார். போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பின் செயலாளர் ஜெயராமன், ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்கள் மணிபாரதி, ராமசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 80 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்ச படியை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெறும் நாளன்றே ஓய்வூதிய பலன்களை வழங்கிட வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story