அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

திருவட்டார் பணிமனை முன்பு அரசு போக்குவரத்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு சங்க தலைவர் ஹரி பிரசாத் தலைமை தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சிங்காரன், மாவட்ட செயலாளர் தங்கமோகன், போக்குவரத்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார், தையல் கலைஞர் சங்கத்தின் மாநில தலைவர் ஐடாஹெலன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். திருவட்டார் பணிமனை அதிகாரிகள் மற்றும் பொறுப்பு அதிகாரி தொழிலாளர்களுக்கு முறையாக விடுப்பு கொடுத்து அதன் பிறகு அதற்கான ஊதியத்தையும் பிடித்தம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் வயதான மற்றும் நோய் வாய்ப்பட்ட ஊழியர்களை ஆள் பற்றாக்குறை என்ற பெயரில் டபுள் டூட்டிக்கு வற்புறுத்துகிறார்கள் என்றனர்.


Next Story