அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்


அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில், 2-ம் கட்ட  மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
x

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (தூத்துக்குடி, திருச்செந்தூர், வேப்பலோடை, நாகலாபுரம்) காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில் 2-ம் கட்டமாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்காக 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 25-ந் தேி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் நேரடியாகவோ அல்லது www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்று வருகிற 27-ந் தேதி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று சேர்ந்து கொள்ளலாம்.

உதவித் தாகை

அரசு தொழிற் பயிற்சிநிலையங்களில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் ;தொகை ரூ.750, இலவச பஸ்பாஸ், சைக்கிள், லேப்டாப், பாடபுத்தகங்கள், வரைபட கருவிகள், சீருடை, காலனி போன்றவை வழங்கப்படுகிறது. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வரை 0461-2340133, 94422 59945, 89253 74688, 94879 86493 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story