ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தமிழக மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்-மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு


ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தமிழக மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார்-மாணிக்கம்தாகூர் எம்.பி. குற்றச்சாட்டு
x

ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தமிழக மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,


ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் தமிழக மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

புத்தக கண்காட்சி

மதுரை திருநகர் அண்ணா பூங்கா அருகே 37-வது தேசிய புத்தக கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. திருநகர் மக்கள் மன்ற தலைவர் செல்லா தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். அனைத்து வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சுரேஷ்பாபு, பள்ளிகள் சீரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை திறந்துவைத்தார். சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் முதல் புத்தக விற்பனையை தொடங்கி வைத்தார். விழாவில் கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ஸ்வேதாசத்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கவர்னர்

முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தலைவிரித்தாடுகிறது. பல மக்கள் தங்களின் சேமிப்புகளையும், கடன் வாங்கிய பணங்களையும் இழந்து தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் மத்திய அரசு திருமங்கலம் தொகுதி மக்களுக்கு பெரிய துரோகத்தை செய்துள்ளது.

2015 தேர்தலில் இலவசத்தை எதிர்த்த பா.ஜ.க. தற்போது குஜராத் தேர்தலில் இலவச அறிவிப்பை அதிகமாக வெளியிட்டுள்ளது. இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் அரசின் கடமையாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பார்க்கிறது என்றார்.


Next Story