தமிழக சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் உத்தரவு


தமிழக சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் உத்தரவு
x

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.கவர்னர் ஆர்.என்.ரவி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்த நிலையில் சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 18-ந்தேதி பொது நிதிநிலை அறிக்கையும் (பொது பட்ஜெட்), 19-ந்தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்து, அதற்கு 2 துறைகளின் அமைச்சர்களும் பதில் அளித்தனர். அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 24-ந்தேதி நிறைவடைந்தது.

இந்தநிலையில் தமிழக அரசு துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்த, சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கியது. 22 நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 10-ந்தேதி வரை நடைபெற்றது.

இந்தநிலையில் சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் நேற்று அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைத்து கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story