கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்
டெல்லி சென்று இருந்த கவர்னர் ஆர்.என்.ரவி இன்று இரவு சென்னை திரும்புகிறார்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக டெல்லி சென்றிருந்தார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மதியம் வரை அவர் அமித்ஷாவை சந்திக்கவில்லை.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து இன்று மாலை சென்னை திரும்புகிறார். சென்னைக்கு அவர் இரவு 8.20 மணிக்கு வந்தடைவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த 13-ந்தேதி கவர்னர் டெல்லி சென்று வந்த நிலையில் நேற்று மீண்டும் டெல்லிக்கு சென்றதால் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story