கவர்னர் ஆர்.என்.ரவி தேவையற்ற அரசியல் பேசி வருகிறார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


கவர்னர் ஆர்.என்.ரவி தேவையற்ற அரசியல் பேசி வருகிறார் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 Oct 2023 1:13 PM IST (Updated: 6 Oct 2023 1:25 PM IST)
t-max-icont-min-icon

கவர்னர் ஆர்.என்.ரவி தேவையற்ற அரசியல் பேசி வருகிறார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தன்னுடைய வேலையை பார்க்காமல் தேவையில்லாத அரசியல் பேசி வருகிறார்; அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் மிகப்பெரிய போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதிமுகவும், பாஜகவும் எங்களுக்கு ஒன்றுதான்.

ஆசிரியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது, பள்ளிகள் திறந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்ப வேண்டும். நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம், அதன்படி வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

தமிழகத்தில் சாதிய பாகுபாடு இல்லை என்று நான் சொல்ல மாட்டேன், பிற மாநிலங்களை விட இங்கு குறைவுதான்; கவர்னர் பிற மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமையை முதலில் பார்க்க வேண்டும். தினமும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை போல் ஐ.டி அதிகாரிகள் ஆகிவிட்டனர்.

சனாதனத்தை பற்றி நான் பேசிக்கொண்டேதான் இருப்பேன், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகும் பேசுவேன். சனாதனம் குறித்து கண்டிப்பாக பேசுவேன்; முதலில் சிஏஜி அறிக்கை குறித்து பேசுவோம், அதன் பிறகு சனாதனம் குறித்து பேசுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story