கவர்னர் ஆர்.என்.ரவி வேலூர் வருகை


கவர்னர் ஆர்.என்.ரவி வேலூர் வருகை
x

கவர்னர் ஆர்.என்.ரவி நாராயணி பீடத்தில் நடந்த யாகத்தில் குடும்பத்துடன் பங்கேற்றார்.

வேலூர்

வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் உலக நன்மைக்காக ருத்ர யாகம் நடந்தது. சக்தி அம்மா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக குடும்பத்துடன் கலந்து கொண்டார். அவர் சொர்ணலட்சுமியை வழிபட்டு, தங்கக் கோவிலையும் பார்வையிட்டார். மேலும் சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். அதைத்தொடர்ந்து புதியதாக நிறுவப்பட்ட நடராஜர் சிலையையும் பார்வையிட்டு வழிபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சாலை மார்க்கமாக வேலூர் வந்தார். அவர் கிரீன் சர்க்கிள், அண்ணாசாலை, தொரப்பாடி வழியாக அரியூர் சென்றார். இதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு இருந்த சாலை பேரிகார்டுகள் மூலம் அடைக்கப்பட்டது. மேலும் காகிதப்பட்டறை தியேட்டர் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையையும் போலீசார் அடைத்தனர். அதன் அருகில் உள்ள சாலையை ஒருவழிப்பாதையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தினர்.

இதேபோல நகரில் சிறு, சிறு போக்குவரத்து மாற்றங்கள் தற்காலிகமாக செய்யப்பட்டிருந்தது. கவர்னர் செல்லும் பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணி அளவில் அவர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story