கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்பொருளியல் மன்ற கூட்டம்


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில்பொருளியல் மன்ற கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் மன்ற கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பொருளியல் துறை சார்பில், பொருளியல் மன்றக்கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் தங்கஷீபா வரவேற்று பேசினார். மாணவியர் செயலாளர் பாலசுந்தரி மன்ற அறிக்கை வாசித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் பொருளியல் துறைதலைவர் ரமேஷ் கலந்து கொண்டு, இந்திய பொருளாதார பிரச்சினைகள் என்ற தலைப்பில் பேசினார். மேலும் மாணவிகளிடம் பொருளாதார துறையின் முக்கியத்துவம் மற்றும் வேலைவாய்ப்பிற்கான சிறந்த துறைகளில் பொருளாதார துறையும் முக்கியமானது என்பதை தெளிவாக எடுத்து கூறினார். இந்திய பொருளாதாரத்துறை பிரச்சினைகள் குறித்த கேள்விகளை கேட்டு மாணவிகளை அவர் ஊக்கப்படுத்தி, பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவி சக்தி ஷிவானி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர் கவிதா வழிகாட்டுதல்படி பேராசிரியைகள் பால்தங்கம், தங்கஷீபா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story