கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்ற தொடக்க விழா
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் அகத்தியர் முத்தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில், அகத்தியர் முத்தமிழ் மன்ற தொடக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை உதவி பேராசிரியரும், மன்ற செயலருமான சுகந்தி வரவேற்று பேசினார். தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முரளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "இலக்கியம் படிப்போம், படைப்போம்" என்ற தலைப்பில் பேசினார். மாணவி ரொசரி அனிஷா நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை தலைவர் ஜான்சிராணி தலைமையில் மன்றத்தினர் செய்திருந்தனர்.
மற்றொரு நிகழ்ச்சியாக வணிகவியல் துறை சார்பில் இக்கல்வியாண்டின் முதல் மன்ற கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார். 3-ம் ஆண்டு மாணவி அகிலா வரவேற்றார். நாசரேத் மர்காசிஸ் கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஜான்சன் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு "ஆளுமை திறனை மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் பேசினார். மாணவி ஜெயஸ்ரீ நன்றி கூறினார். ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் கமலச்செல்வி மற்றும் உதவி பேராசிரியர் மாரியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.