அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி


அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
விழுப்புரம்

திண்டிவனம்:

திண்டிவனம் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர்விடுதி திறப்பு விழா நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மாணவர் விடுதியை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திண்டிவனம் அரசு ஆதிதிராவிடர் கல்லூரி விடுதியில் 70 மாணவாகள் தங்கியுள்ளனர். இந்த விடுதி 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் சேதமடைந்துள்ளது. எனவே மாற்று இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, விடுதி செயல்படுகிறது. திண்டிவனத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. தமிழகத்தில் முன்மாதிரியான நகராட்சியாக திண்டிவனம் உருவாக்கப்படும். மழையால் சேதமடைந்த சாலைகள், விரைவில் சீரமைக்கப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ரூ.55 கோடியில் கட்டப்பட்டுவரும் மகப்பேறு பிரிவுக்கான கட்டிட பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார். ஆய்வின்போது திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிசந்திரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரகுகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ணன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர், பொருளாளர் ரமணன், அரசு ஒப்பந்ததாரர் நந்தா, வி.சி.க. மாவட்ட செயலாளர் சேரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story