திருவாரூரில், அரசு உதவிபெறும் பள்ளிக்கு விடுமுறையா?
மாணவிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் திருவாரூரில், அரசு உதவி பெறும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்று தகவல் பரவி வருகிறது.
மாணவிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு வருவதால் திருவாரூரில், அரசு உதவி பெறும் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்று தகவல் பரவி வருகிறது.
மாணவிகளுக்கு காய்ச்சல்
திருவாரூர் நகரில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் ஏற்பட்டது.
இதன் காரணமாக மாணவிகள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகின்றனர்.
மருத்துவ முகாம்
இதனை தொடர்ந்து பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் பரிசோதனையும் சுகாதாரத்துறை மூலம் நடத்தப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவிகளுக்கு தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் ஒப்புதலுடன் பள்ளிக்கு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.