அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகம் முன்பு கவுரவ பேராசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

வீரபாண்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகம் முன்பு கவுரவ பேராசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த 10 ஆண்டுகளாக கவுரவ பேராசிரியர்களாக பணியாற்றி வருபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் கவுரவ பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story