அரசு பஸ்-ஆட்ேடா மோதல்; 2 வாலிபர்கள் பலி


தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அருகே அரசு பஸ்-ஆட்டோ மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடி அருகே அரசு பஸ்-ஆட்டோ மோதியதில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

2 பேர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து விக்கிரபாண்டிபுரம் கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று நேற்று இரவு சென்றது. சத்தியமூர்த்தி காலனியில் இருந்து பரமக்குடி நோக்கி வந்த ஆட்டோவும், அந்த அரசு பஸ்சும் திடீரென மோதிக்ெகாண்டன. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த ராம் நகரை சேர்ந்த நடராஜன் மகன் ரஞ்சித் (வயது 28), ஆட்டோவில் இருந்த வெங்கடேசுவரா காலனியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் ராமதாஸ் மகன் கோகுல் (18) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள்.

போலீஸ் விசாரணை

இது பற்றிய தகவல் அறிந்ததும் எமனேசுவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கோகுல், ரஞ்சித் ஆகியோரின் உடல்களை பரிசோதனைக்காக பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து எமனேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story