அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடிப்பு
கயத்தாறு அருகே அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
தூத்துக்குடி
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் கிராமத்திற்கு நேற்று அரசு டவுன் பஸ் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சை கிராம மக்கள் திடீரென்று சிறைபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் ஊருக்கு இந்த பஸ் மட்டுேம உள்ளது. இந்த பஸ்சை நம்பிதான் மாணவர்கள் வெளியூர் சென்று படிக்க வேண்டும். ஆனால் இந்த பஸ் முறையாக இயக்கப்படுவது இல்லை. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர்.
இதையடுத்து கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேசியதில் பஸ் இனிமேல் முறையாக வரும் என்று தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story