அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x

மணல்மேடு அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 26-ந் தேதி நடக்கிறது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 26-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இதில் எம்.எஸ்சி கணிதம், எம்.எஸ்சி கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ் மற்றும் அனைத்து மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் 5 பிரதிகள், 5 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும். இதில், தேர்ந்தெடுக்கப்படுவர்கள் அன்றைய தினமே கல்லூரி கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பித்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் http://gascmlmd.in என்ற இணையதளத்தில் காணலாம். குறுஞ்செய்தி மற்றும் செல்போன் மூலமாகவும் மாணவ-மாணவியகளுக்கு கலந்தாய்வு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story