அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தூரில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சாத்தூர்,

கோரிக்கைகளை வலியுறுத்தி சாத்தூரில் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமத்துவ பொங்கல்

சாத்தூர்-சிவகாசி சாலையில் சாத்தூர் அருகே மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்த கல்லூரி தற்போது அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியாக 2 ஆண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் இளங்கலை பிரிவுகளில் 4 பாடங்கள் நடைபெற்று வருகிறது. அதாவது தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் அடங்கிய இந்த பிரிவுகளில் 625 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். 25 பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் பொங்கல் விழாவினை முன்னிட்டு நடத்தப்படும் சமத்துவ பொங்கல் விழாவை நடத்த கோரி கல்லூரி முதல்வரிடம் மாணவ, மாணவிகள் அனுமதி கோரினர்.

போராட்டம்

சமத்துவ பொங்கல் நடத்துவதற்கு கல்லூரி முதல்வர் அனுமதி அளிக்காததால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும். கல்லூரி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் எனவும் அப்போது மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன், போலீசார், கல்லூரி முதல்வர் ஆகியோர் மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story