அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம் செய்தனர்.
விருதுநகர்
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஜார்கண்ட் மாநிலங்கள் ரத்து செய்துவிட்ட நிலையில் தேர்தல் வாக்குறுதிப்படி பஞ்சாப் மாநிலத்திலும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியளித்த நிலையிலும் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இ்ந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இத்திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்க கோரியும், பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். மாவட்டம் முழுவதும் 200 பெண்கள் உள்பட 750 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story