ஊட்டியில் அரசு ஊழியர்கள் நடைபயணம்


ஊட்டியில் அரசு ஊழியர்கள் நடைபயணம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் அரசு ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

நீலகிரி

ஊட்டி,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில், பழைய ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி நேற்று ஊட்டியில் நடைபயணம் நடைபெற்றது. ஊட்டி ஸ்டேட் வங்கியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை அரசு ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர். அரசு ஊழியர்கள் ஓய்விற்குப்பிறகு, உயிர் வாழ ஓய்வூதியம் வழங்க கோரி பதாகைகளை ஏந்தி சென்றனர். பின்னர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.


Next Story