நெல்லையில் அரசு மருத்துவமனை செவிலியர் எரித்துக் கொலை - கணவர் போலீசில் சரண்
மனைவியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கணவன், கோவில்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
நெல்லை,
நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரை அவரது கணவரே கத்தியால் குத்தி, நடுரோட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த நிலையில், பணி முடிந்து வீடு திரும்பிய போது அரசு மருத்துவமனை செவிலியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் போது சாலையில் இருவரும் சண்டயிட்டுச் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மனைவியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய கணவன், கோவில்பட்டி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான முழு விவரங்கள் விசாரணைக்குப் பின் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story