அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
திருப்பத்தூர்
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மற்றும் துளிர் திறனறித்தேர்வில் கெஜல்நாயக்கன்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவிகள் புவேனஸ்வரி, நிஷாந்தினி மற்றும் 10- ஆம் வகுப்பு ரேணுகா, ஹரினி ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களை பாராட்டி உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக்) வேதபிரகாஷ் ஆகியோர் பதக்கம், சான்றிதழ் வழங்கினர். விருது பெற்றவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிநாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story