அரசு - தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதம்
ஒரே நேரத்தில் அரசு - தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ராஜபாளையம்,
ஒரே நேரத்தில் அரசு - தனியார் பஸ்கள் இயக்கப்பட்டதால் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம்
ராஜபாளையம் மையப்பகுதியில் பழைய பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் தனியார் பஸ் ஒன்று சிறிது நேரம் கழித்து வந்ததால், அரசு பஸ் புறப்பட தயாரானது. அப்போது அங்கு அந்த தனியார் பஸ்சும் வந்தது. அந்த வழித்தடத்தில் தனியார் பஸ் தொடர்ந்து இயங்குவதற்காக தயாரானது. 2 பஸ்களும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டதால் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு இடையே பஸ்சை எடுப்பது சம்பந்ததாக வாக்குவாதம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதனால் அரசு பஸ் டிரைவர் அந்த இடத்திலேயே பஸ்சை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்தனர்.
பின்னர் உரிய வழித்தடங்களில் செல்லும் பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து இரு பஸ்களும் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.