அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்


அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 17 Feb 2023 12:45 AM IST (Updated: 17 Feb 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராஜன், தனி தாசில்தார் முத்து முருகேசபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை உதவி திட்ட அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, மயான வசதி, சமுதாயக்கூடம் அமைத்து தரக்கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாரத் குமார், திருமருகல் வருவாய் ஆய்வாளர் சுந்தரவளவன், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன், கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி, கூட்டுறவு சார்பதிவாளர் குணபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.


Next Story