பேச்சு போட்டிகளில் அரசு பள்ளி-கல்லூரி மாணவர்கள் முதலிடம்


பேச்சு போட்டிகளில் அரசு பள்ளி-கல்லூரி மாணவர்கள் முதலிடம்
x

பேச்சு போட்டிகளில் அரசு பள்ளி-கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

பெரம்பலூர்

தமிழக அரசின் உத்தரவின்படி மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சு போட்டிகள் நேற்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டிக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். போட்டிகளில் பள்ளி மாணவ-மாணவிகள் 62 பேரும், கல்லூரி மாணவ-மாணவிகள் 23 பேரும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடந்த பேச்சு போட்டியில் முதல் இடத்தை செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியின் 11-ம் வகுப்பு ஏ 3 பிரிவு மாணவி கீர்த்தனாவும், இதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் முதல் இடத்தை வேப்பந்தட்டை அரசு கலை-அறிவியல் கல்லூரியின் பி.ஏ. தமிழ் இரண்டாமாண்டு மாணவர் பூபாலனும் பிடித்தனர். போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசுக்கு கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவி ரம்யாவும், நூத்தப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் 9-ம் வகுப்பு மாணவி அபிநாயவும் பிடித்தனர். போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையிலும், இவை அல்லாமல் அரசு பள்ளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசு தொகை தலா ரூ.2 ஆயிரம் வீதமும் கலெக்டர் மூலம் வழங்கப்படவுள்ளது.


Next Story