சரக்கு வேன் மோதியதில் அரசு பள்ளி இளநிலை உதவியாளர் பலி


சரக்கு வேன் மோதியதில் அரசு பள்ளி இளநிலை உதவியாளர் பலி
x

சரக்கு வேன் மோதியதில் அரசு பள்ளி இளநிலை உதவியாளர் பலியானார்.

திருச்சி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், நல்லையநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேக்ரியாசுதீன் (வயது 46). முன்னாள் ராணுவ வீரரான இவர் புதுக்கோட்டை மாவட்டம், செவல்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று அலங்காநல்லூரில் இருந்து செவல்பட்டிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி பஞ்சாபி தாபா உணவகம் எதிரே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, பெரம்பலூரிலிருந்து சிவகங்கை நோக்கி சென்ற சரக்கு வேன் அவர் மோதியது. இதில் படுகாயமடைந்த சேக்ரியாசுதீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மேலப்பசலையைச் சேர்ந்த அனீஸ் குமார் (22) என்பவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story