பறக்கும் படை வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தம்
ஜி.பி.ஆர்.எஸ். கருவி
ஈரோடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த 3 நாட்களாக பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்தும் வாகனங்களில் ஜி.பி.ஆர்.எஸ். பொருத்தப்பட்டன. இதன் மூலம் பறக்கும் படை வாகனங்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து சுற்றி வருகிறார்கள் என்பதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story