பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை


பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை
x

தேப்பெருமாநல்லூரில் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 35). பல்வேறு பட்டங்களை பெற்றுள்ள இவர் குரூப்-2 தேர்வு எழுதியுள்ளார். மேலும், இவருக்கு இன்னும் திருமணமும் ஆகவில்லை. வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்கிறேன் என வீட்டில் கூறி வந்துள்ளார். ஆனால், அவருக்கு வேலை எதுவும் கிடைக்காததால் விரக்தியில் நேற்று மாலை வீட்டின் மாடியில் விஷம் குடித்து விட்டு மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை மீட்டு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.









Next Story