பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை


பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
x

பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை நேரு நகரில் வசிக்கும் காந்தி-குமுதவள்ளி தம்பதியின் மகள் சுபாஷினி (வயது 22). இவர் பி.ஏ. முடித்துவிட்டு மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இவரது பெற்றோர், உறவினர் வீட்டின் விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுபாஷினி பலத்த தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுபாஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சுபாஷினி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ேமலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story