திண்டிவனம் அருகேபட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


திண்டிவனம் அருகேபட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பட்டதாரி வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரவீன் (வயது 28). இவர் பி.ஏ. படித்து முடித்து விட்டு, விவசாயம் செய்து வந்தார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மனைவியும், 8 மாதத்தில் ஆண் குழந்தையும் உள்ளது. இவருடைய தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் விரக்தியில் இருந்து வந்த பிரவீன் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி, ரோஷணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story