பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
விருத்தாசலம்
விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் நியமன கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் பக்தவச்சலம், விஜயபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் வெற்றிவேல், செயலாளர் தெரசா கேத்ரின், பொருளாளர் ஏழுமலை, துணை தலைவர்கள் வேலழகன், சேகர், திருநாவுக்கரசு, இணை செயலாளர்கள் நாகராஜன், சிவக்குமார், பாரதிதாசன், சட்ட செயலாளர் வெங்கடேசன், தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர், செய்தி தொடர்பாளர் சீனிவாசன், மகளிரணி செயலாளர்கள் ஹெலன், அனிதா ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.