பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பரமக்குடியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பரமக்குடி,
பரமக்குடி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர்கள் கரோலின் சாந்தகுமாரி, ராமலட்சுமி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராமசாமி, முகமது இப்ராகிம், மருதுபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பூப்பாண்டியன் வரவேற்று பேசினார்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர வேறு பணியை வழங்கக் கூடாது. பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் மண்டல ஆய்வுகளை நடத்தி கற்பித்தல் பணியை முடக்க கூடாது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் முன்னாள் மாநில துணைத்தலைவர் திருநீலகண்ட பூபதி, மாவட்ட தலைவர் முருகன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் சேகர், சங்க நிர்வாகிகள் அலி அக்பர், சிவகணபதி, முருகேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.