பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வடக்கு மண்டலத்தின் சார்பில் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாநில பொதுச்செயலாளர் பேட்டரிக் ரெய்மான்ட் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சசிகுமார், லட்சுமி வெங்கடேஷ், செல்வத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story