அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
சங்கராபுரம்.
சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு முதல்வர் சுடர்விழி தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழு தலைவர் முனைவர் அரவிந்த் முன்னிலை வகித்தார். இளநிலை பயிற்சி அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் சிவநடராஜன் கலந்துகொண்டு ஓராண்டு பயிற்சி முடித்த 54 மாணவர்களுக்கும், இரண்டாண்டு பயிற்சி முடித்த 68 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். இதில் இளநிலை பயிற்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், பயிற்றுனர்கள் கிருஷ்ணமூர்த்தி, வசந்தன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story