பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா


பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
x

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் 37-வது பட்டமளிப்பு விழா கலையரங்கத்தில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மைதிலி தலைமை தாங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 1,460 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். மேலும் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற இளங்கலை மனிதவள மேம்பாட்டு துறை மாணவி கார்த்திகா கயல்விழி, முதுகலை மாணவி சுபா, முதுகலை வேதியியல் துறை மாணவி கனகவல்லி, இளங்கலை இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் மாணவி உமாரமணி ஆகியோருக்கு தங்கப்பதக்கம் அணிவித்து பட்டங்களை வழங்கினார். அத்துடன் இந்த கல்லூரியில் படித்த 40 மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியைகள், பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story