கிராமசபை கூட்டம்


கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2023 1:15 AM IST (Updated: 17 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே எண்டப்புளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.

தேனி

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், எண்டப்புளி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஜே.கே.காலனியில் நடந்தது. இதற்கு தலைவர் சின்னபாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கோகிலா முன்னிலை வகித்தார். பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய உதவியாளர் தங்கம் கலந்து கொண்டார். கூட்டத்தில் தணிக்கை அறிக்கை சமர்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்ட முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சைமணி நன்றி கூறினார்.


Next Story